×

மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதில்லை - ஜோதிகா சர்ச்சைக்கு விளக்கமளித்த சூர்யா

சில நாட்களுக்கு முன்பு ஒரு சினிமா விழாவில் பேசிய நடிக ஜோதிகா கோவில்களுக்கு செய்யும் அதே செலவுகளை பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் செய்தால் நன்றாக இருக்கும் எனப்பேசியிருந்தார்.
 

ஆனால், அவர் என்ன பேசினார் என்பதையே புரிந்து கொள்ளாமல், அவர் பேசிய வீடியோவையும் பார்க்காமல் ஜோதிகாவை சிலர் குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஜோதிகா கூறியது சரிதான் என பலரும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா இதுபற்றி விளக்கமளித்து தனது டிவ்ட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை' என்கற கருத்து 'சமூக ஊடக' விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா அவர்கள்‌ பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

'கோவில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாக கருத வேண்டும்‌' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, பலர்‌' குற்றமாக பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மீகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கறார்கள்‌. 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்து சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாக கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. 'கொரானா தொற்று' காரணமாக இயல்பு வாழ்க்கைப்‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்‌சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மீகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. 'மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. 

தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்கு துணை நிற்கிறார்கள்‌. முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. 'நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌' என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌. என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், #அன்பைவிதைப்போம் #SpreadLove என்கிற ஹேஷ்டேக்குகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News