
Cinema News
நம்ம பசங்க தான் ஒளிஞ்சிருக்க லட்சணம் அப்படி… வசமாக சிக்கிய சூர்யா44 மியூசிக் டைரக்டர்…
Published on
By
Surya44: நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தின் மியூசிக் டைரக்டரை படக்குழு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் அவரே தானாக வந்து சிக்கிய ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்து இருக்கிறது.
ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று என இரு மாஸ் ஹிட் படங்களை கோலிவுட்டுக்கு தந்தவர் சூர்யா. இதில் சூரரைப் போற்று ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இருந்தது. ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் எனக் கூட எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஹிட் படங்களை கொடுத்த சூர்யா அதற்கடுத்து 2022ம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு.. உண்மையை உடைத்த பாக்கியா..
இதை தொடர்ந்து அவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோ செய்தார். அடுத்ததாக, ராக்கெட்ரி படத்தில் சூர்யாவாகவே கேமியோ செய்து மட்டுமே இருந்தார். 2 வருடங்களை கடந்த நிலையில் இதுவரை சூர்யாவின் படங்களே வெளியாகவில்லை.
சூர்யாவின் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தின் கடைசிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இது சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘சேது’ படத்தில் ஹீரோயினுக்கு நடந்த அவமானம்! பாலாவின் அறியாத இன்னொரு முகம்
இந்நிலையில் சூர்யாவின் நடிப்பில் உருவாக இருக்கும் 44வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. 2D எண்டெர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
இதை யாரும் லீக் செய்யவில்லை. சந்தோஷ் நாராயணன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு ரசிகர் ஒருவர் சூர்யா44 படத்துக்கு டான்ஸ் மெட்டிரியல் பாட்டு வையுங்க எனக் கேட்டு சந்தோஷ் நாராயணனை டேக் செய்து இருந்தார். அதற்கு சனாவும் லைக்ஸ் செய்து தானாகவே சிக்கி இருப்பது தற்போது வைரலாகி இருக்கிறது.
Idli kadai: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்....
Vijay: கரூரில் நடந்த அந்த கோர சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விஜயின் தேர்தல் பரப்புரையின் போது 41...
Rajinikanth: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து 50...
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு...
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...