இதாவது கேட்குற மாதிரி இருக்குமா?.. சூர்யாவின் ‘கருப்பு’ 3வது சிங்கிள்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் வரும் மே 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கருப்பு படத்தின் 3வது சிங்கிள் வெளியாகும் என டைரக்டர் ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலுக்கு கூட படம் வெளியாகவில்லை.
சாய் அபயங்கர் இசையில் ஏற்கனவே காட் மோட், நாங்க நாலு பேர் பாடல்கள் வெளியாகின. இதில், காட் மோட் பாடல் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு 2வது பாடல் கவரவில்லை. மாறாக பலரும் அந்த பாடலை திட்டியும் கலாய்த்தும் வறுத்தெடுத்தனர்.
தொடர்ந்து சாய் அபயங்கர் இசையமைக்கும் பாடல்களில் எல்லாம் வார்த்தைகளே புரியவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது. இந்நிலையில், 3வது பாடலாவது ரசிகர்களுக்கு புரியும்படி இருக்குமா? என்கிற வினாவை எழுப்பி வருகின்றனர்.
வரும் தமிழ் புத்தாண்டுக்கு சூர்யா ரசிகர்களுக்கு சரியான தீனியை ஆர்ஜே பாலாஜி மற்றும் சாய் அபயங்கர் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கருப்பு படத்துக்குப் போட்டியாக இதுவரை மே மாதம் எந்தவொரு படமும் அறிவிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிந்ததும் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி வெளியாக உள்ளது. சுந்தர். சியின் புருஷன், ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு 2 உள்ளிட்ட பல படங்கள் வெளியாக காத்துக் கிடக்கின்றன.
