10 கோடியை தாண்டிய அட்வான்ஸ் புக்கிங்!.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. ’கருப்பு’ வரான் வழி மறிக்காதே!..
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே வசூல் வேகத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது. மே 14, 2026 அன்று வெளியாக உள்ள இந்தப் படம், முன்பதிவிலேயே ரூ. 10 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வரும் சாய் அப்யங்கர் கருப்பு படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பல திரையரங்குகளில் முதல் நாள் ஷோ ஏற்கனவே ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், படத்தின் மீதான ரசிகர் வரவேற்பை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மே 14 மற்றும் 15 தேதிகளில் காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தினமும் 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெறும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. நடிகர் சூர்யாவின் தொடர் தோல்வியை தாண்டி இந்த படமாவது கைக்கொடுக்குமா என காத்திருந்து பார்க்கலாம்.
