கோவையில் கொடி நாட்டப்போகும் சூர்யா!.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆடியோ லான்ச் எப்போ தெரியுமா?..
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கியுள்ள இந்த தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
படத்தில், சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற தொழில்முறை துப்பாக்கிச் சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நாற்பது வயதை எட்டிய அவர், வயது காரணமாக பார்வை குறையும் சவாலை எதிர்கொள்ளும் நிலையிலும், தனது விளையாட்டு கனவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். அதே நேரத்தில் குடும்பப் பொறுப்புகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உருவாகிறது.
Get Ready for the Grand Celebration 🥳
— Sithara Entertainments (@SitharaEnts) July 31, 2026
The One is arriving to ignite the celebrations like never before. 🔥#VishwanathAndSons Grand Audio Launch Event on August 2nd. 💥💥
📍Hindusthan College of Arts & Science, Coimbatore#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri… pic.twitter.com/fAOAn4x9AR
இதற்கிடையில், மேடி என்ற கதாப்பாத்திரத்தில் மமிதா பைஜூ சஞ்சய் விஸ்வநாத்தை காதலிக்கிறார். இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் காரணமாக அந்த உறவை ஏற்க தயங்கும் நாயகனின் மனநிலையும், அதைச் சுற்றி உருவாகும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளும் படத்தின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளன.
மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஓணம் மற்றும் சுதந்திர தின வெளியீட்டை முன்னிட்டு திரைக்கு வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' பல படங்களுடன் போட்டியிட உள்ளதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.
