அலட்சியப்போக்கால் அசிங்கப்பட்ட சூர்யா.. ஹைப்பே இல்லாத ரெட்ரோ.. என்னதான் நடக்குது?

கங்குவா திரைப்படம் வெளியாகி சூர்யாவிற்கு ஒரு பெரிய பின்னடைவை கொடுத்தது. பிரம்மாண்டப் பொருள் செலவில் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படம் கங்குவா. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. வசூலிலும் மண்ணை கவ்வியது. அதனால் அடுத்த படத்தை ஒரு வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சூர்யா இருக்கிறார்.
கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ரெட்ரோ திரைப்படத்தை பொருத்தவரைக்கும் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை .
கோடம்பாக்கத்தில் அரல் புரசலாக ரெட்ரோ திரைப்படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் ட்ரெய்லர் வந்ததோடு சரி படத்தைப் பற்றி எந்த ஒரு ஹைப்பும் இல்லை .ஒரு ஆர்வமும் ரசிகர்களிடையே இதுவரை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றாலே அந்த படத்தை பற்றிய பேச்சு சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும்.
ஆனால் ரெட்ரோ படத்தை பொருத்தவரைக்கும் அப்படி ஒரு ஹைப் இருந்ததாக தெரியவில்லை. அதற்கு காரணம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்து விட்டால் அதிலிருந்து ஒரு 15 நாட்கள் தொடர்ந்து படத்தை பற்றிய தகவல்தான் வந்த வண்ணம் இருக்கும். அதனால் தான் இப்படி ஒரு நிலையில் ரெட்ரோ திரைப்படம் இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
அதோடு ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45 வது திரைப்படம் தற்போது ஒரு பிரச்சனையில் மாட்டியது. ஏதோ ஒரு கிராமத்தில் படப்பிடிப்பை எடுத்துக் கொண்டிருக்க அந்த கிராமத்து தலைவரிடமும் போலீஸாரிடமும் எந்த ஒரு முன் அனுமதியும் பெறாமல் தான் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அதனால் அந்த கிராம மக்கள் மொத்தமாக பட குழுவுக்கு எதிராக திரும்பி புகார்களை கொடுத்திருக்கின்றனர்.
இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறுத்தி இருக்கிறார்கள் .இது ஒரு வகையான அலட்சியம் தான். ஒரு பெரிய நடிகரின் படத்தின் படப்பிடிப்பை ஒரு கிராமத்தில் எடுக்கிறார்கள் என்றால் சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர் அல்லது அதிகாரிகள் இவர்களிடம் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும் .அதோடு படப்பிடிப்பு என்றாலே பெரிய பெரிய லைட்டிங்ஸ் எல்லாமே பயன்படுத்துவார்கள் .அது அந்த கிராம மக்களுக்கு பெரிய அளவில் இடையூறாக இருக்கும் .இதெல்லாம் எப்படி இந்த படக்குழுவினர் மறந்தார்கள் என்று தெரியவில்லை என அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.