மனைவி மூலமா வந்த ஆஃபரா இது? சூர்யாவின் அடுத்த படம் சும்மா ஒன்னும் நடந்திடல

by Rohini |
Jyothika
X

மாஸ் ஹீரோ:தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனரை பற்றிய ஒரு தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சினிமாவில் மெனக்கிடும் நடிகர்களில் சூர்யாவும் ஒரு குறிப்பிடத் தகுந்த நடிகர்.

சினிமா தான் எல்லாமே:சினிமாவிற்காக எத்தனையோ பல தியாகங்களை செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்த சூர்யா இப்போது எல்லாமே சினிமா தான் என்ற அளவுக்கு மாறி இருக்கிறார். ஒரு பக்கம் தயாரிப்பு பணியிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் .

பிசியான நடிகர்:இன்னொரு பக்கம் பாலிவுட் டோலிவுட் என வேறு மொழிகளிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் அவருடைய 45 வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது.

ரெட்ரோ ரிலீஸ்: மே ஒன்றாம் தேதி ரெட்ரோ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை பற்றிய ஒரு செய்தி தற்போது கிடைத்துள்ளது. இவரது அடுத்த படத்தை மலையாள இயக்குனரும் நடிகருமான ஃபாசில் ஜோசப் இயக்கப் போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கு பின்னணியில் என்ன காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா தி காதல் கோர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனால் அவரைப் பார்ப்பதற்காக சூர்யா கேரளா சென்றிருந்தபோது அங்கு சில மலையாள இயக்குனர்களுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. சூர்யாவுக்கு அந்த நேரத்தில் தான் பாசில் ஜோசப்பை சந்தித்து இருக்கிறார் சூர்யா.


சூப்பர் காம்போ:சூர்யாவே பார்சல் ஜோசப்பிடம் ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் நாம் சேர்ந்து பண்ணலாம் எனக் கேட்டதாகவும் அதன் பிறகு தான் இந்தக் காம்போ இணைய இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. மலையாளத்தில் மின்னல் முரளி , ஜெய ஜெய என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பாசில் ஜோசப். சூர்யா போன்ற ஒரு நல்ல நடிகர் இவருக்கு கிடைத்தால் கண்டிப்பாக மாஸ் பண்ணுவார் என்றே கூறப்படுகிறது.

Next Story