சூர்யா 50ஐ கைப்பற்றிய ஜனநாயகன் தயாரிப்பாளர்

 
சூர்யா 50ஐ கைப்பற்றிய ஜனநாயகன் தயாரிப்பாளர்

நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் இவரது நடிப்பை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது, அதன்பின் அவர் நடித்த காக்க காக்க, பிதா மகன், அயன் எனதொடர்ந்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தற்போது சூர்யா நடிப்பில் கருப்பு படம் மே 14ல் வெளியாகிறது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இதனை அடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

இந்த நிலையில் சூர்யா தந்து 50வது படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் யார் என்று தெரியாத நிலையில் படத்தின் தயாரிப்பாளர் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் நடித்த ஜனநாயகன் படத்தினை தயாரித்த கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

From Around the web