suriya
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் பாலாவுடன் இருந்த சின்ன சின்ன கருத்து வேறுபாட்டால் வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டார்.
ஆரம்பத்தில் கிடைத்த கதைகளில் நடித்துக் கொண்டிருந்த சூர்யாவை ஒரு மாஸ் நடிகராக மாற்றிய பெருமை இயக்குனர் பாலாவை தான் சேரும். நந்தா , பிதாமகன் போன்ற படங்களில் சூர்யாவின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது.
surya
அதன் பின் தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இன்று தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யாவின் ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணியில் இருக்கும் ரசிகர்கள் சூர்யாவின் உருவத்தில் மிகப்பிரம்மாண்டமான கட் அவுட்டை சுமார் ஏழரை லட்சம் செலவில் அமைத்து அதை சூர்யாவுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதையும் படிங்க : இவங்கள வச்சு ஒரு சம்பவமே பண்ணியிருப்பாரு!.. நல்ல வேளை வெங்கட் பிரபு ‘பொன்னியின் செல்வன்’ படிக்கல!..
இதை பார்த்த சூர்யா அவர்களை வரவழைத்திருக்கிறார். இதை அறிந்த அந்த ரசிகர்களும் நம்மை வரவழைத்து உபசரிக்கத்தான் போகிறார் சூர்யா என்ற சந்தோஷத்தில் சென்றிருக்கின்றனர். ஆனால் சூர்யாவோ இவ்ளோ செலவில் கட் அவுட்டை வைத்து பணத்தை விரயம் செய்யவேண்டாம் எனவும் அந்த பணம் இருந்தால் ஏழு குடும்பங்களை பிழைக்க வைத்திருக்கலாம் எனவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
suriya
தன் தலைவன் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் சூர்யா இப்படி சொன்னதும் சூர்யாவிற்கு ரசிகர்களாக இருக்க பெருமை படுகிறோம் என்று கூறினார்களாம். இதன் மூலம் விஜய் அஜித் இவர்களும் தங்கள் மீது வெறித்தனமாக இருக்கும் ரசிகர்களுக்கு பொங்கல் அன்று எந்த ஒரு அசம்பாவிதமும் செய்யவேண்டாம் என சொன்னால் மிக நன்றாக இருக்கும் என இந்த தகவலை கூறிய வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
Idli kadai:…
Idli kadai…
Kantara 2:…
Vijay: விஜய்…
கோலிவுட்டில் முக்கிய…