×

சூரரைப்போற்று ரிலீஸ் தொகையில் ரூ.5 கோடி நிதியுதவி... சூர்யா அறிவிப்பு...

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சூர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்தார். ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.
 

4 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தின் வெளியீட்டு தொகையில் ரூ.5 கோடி நிதியுதவி செய்யப்படும் என சூர்யா அறிவித்துள்ளார்.  அந்த தொகை பொதுமக்கள், கொரோனா காலத்தில் பணியாற்றிய சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக சார்ந்தவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்து கொடுக்கப்படும். இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சூர்யா கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News