Surya50: சூர்யாவின் 50வது படம்... இயக்குனர் இவரா?
நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகம் ஆனவர் சூர்யா. தொடரந்து படஙக்ள் நடித்தாலும் அவரை ஒரு நடிகராக மாற்றியது பாலா இயக்கிய நந்தா படம்தான். அதன்பின் அவர் நடித்த பல படங்கள் வெற்றிதான். பிரண்ட்ஸ், பிதா மகன், அயன், சிங்கம், காக்க காக்க என் சொல்லிகொண்டே போகலாம். ஆனால் சிங்கம் 2 வெற்றிக்கும்பின் அவர் நடித்த படஙக்ள்தொடந்து தோல்வியையே த்ழுவின.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான கருப்பு பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவின் படம் வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ரூ 345 கோடி வசூல் மூலம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் கருப்பு முதலிடம் பெற்றுள்ளது. கருப்பு வெற்றி சூர்யாவுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இதனை தொடர்ந்து சூர்யாவின் 47வது படத்தை ஜித்து மாதவன் இயக்குகிறார். இதனை அடுத்து 48வது படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.
இந்த நிலையில் சூர்யாவின் 50வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்கு கேள்வியாக இருந்து வருகிறது. தற்போது சூர்யா தரப்பில் நெசல்சன் திலீப்குமாரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது ஜெயிலர் 2வில் பிஸியாக இருக்கும் நெல்சன் அடுத்து சூர்யா படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
