Categories: Cinema News latest news

சாதனையில் பட்டையை கிளப்பும் சூர்யா- ஜோதிகா வாரிசு..! இந்த வயதில் இப்படி ஒரு வெற்றி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் சூர்யா- ஜோதிகா முக்கியமானவர்கள். 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவ் மற்றும் தியா ஆகியோர்.

அதில் தியா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துள்ளார். சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் வெளியான நிலையில் சூர்யாவின் மகள் தியாவின் மதிப்பெண்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தியாவின் மதிப்பெண்களின் விவரம்: தமிழ்- 95, ஆங்கிலம்-99, அறிவியல்-95, வரலாறு-95, கணிதம் – 100. தன் மகளின் தேர்ச்சி விகிதத்தை கண்டு குடும்பமே மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கெனவே சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது குடும்ப வாரிசான தியாவின் இந்த வெற்றி மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini