×

நாஞ்சில் விஜயனை கதற கதற வீடு புகுந்து அடித்த சூர்யா தேவி... போலிசில் புகார்!

காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் காமெடி நடிகராக பிரபலமானவர் நாஞ்சில் சம்பத். கலக்கப் போவது யாரு, அது இது எது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். 
 

இதை தொடர்ந்து இவர் யூ-டியூபில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவரது வீட்டுக்குள் புகுந்த சில ரவுடிகள் அவரை அடித்துவிட்டு, தப்பி சென்றதாகவும், இதன் பின்னணியில் சூர்யாதேவி என்பவர் உள்ளார் எனவும் நாஞ்சில் விஜயன் காவல்துறை தரப்பில் புகாரளித்துள்ளார். சூர்யாதேவி பல்வேறு சர்ச்சைகளில் இதற்கு முன்னர் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News