×

விடாமல் துரத்திய சூர்யா தேவி... அரை நிர்வாணமாக தப்பி ஓடி வந்தேன் - நாஞ்சில் விஜயன்!

கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் நாஞ்சில் விஜயன். இந்நிலையில் சமீபத்தில் அவர் சூர்யாதேவியை பேட்டி எடுத்தது மிகவும் வைரலானது. 
 
 

இதன்மூலம் அவர் பல சர்ச்சைகளை சந்தித்தார். இந்நிலையில் நேற்றைய தினம் திடீரென நாஞ்சில் விஜயன் காவல்துறையில் புகார் அளித்தார்.

உடல் முழுவதும் காயங்களுடன் வந்த அவர், சூர்யா தேவி என்ற பெண் தன்னை ஆட்களுடன் வந்து கடத்தி சென்று கொடூரமாக அடித்ததாகவும், மேலும் தன் குடும்பத்தினரையும் காயபடுத்தியதாகவும் அவர் புகார் எழுப்பியுள்ளார். 

இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறும்போது "எனக்கும் சூர்யா தேவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் ஏன் இப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை" என்றும், அரை நிர்வாண நிலையில் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News