×

வனிதா விவகாரத்தில் திடீர் திருப்பம்: கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுதலை...!

வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றி அவதூறு பேசி கைது செய்யப்பட்ட நடிகை சூர்யா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

 

சமீபத்தில் நடிகை வனிதா விஜய்குமார் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் முதலில் பேட்டியளித்த வீடியோக்கள் வைரல் ஆகிய நிலையில் வனிதாவின் திருமணத்தை கண்டித்து வீடியோக்கள் வெளியிட்ட திரையுலக நட்சத்திரங்களின் வீடியோக்களும் வைரலாகியது.

குறிப்பாக சூர்யா தேவி என்ற பெண் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்ட வீடியோக்களும் அதற்கு பதிலடி கொடுத்த வனிதாவின் வீடியோக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வனிதா இப்போது சென்னையில் தன்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்ததாக சூர்யா தேவி மீது புகார் அளிக்க சூர்யா தேவியை போலிஸார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட சூர்யா தேவியை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சூர்யா தேவியை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News