×

சூர்யாவுக்கு நடிப்பின் ஸ்பெல்லிங் கூட தெரியாது - எல்லை மீறி வம்பிழுக்கும் மீரா மிதுன்!

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.

சமீப நாட்களாக மீரா மிதுன் திரிஷா , நயன்தாரா , கமல் , விஜய் , ரஜினி என பெரிய நடிகர்களை நடிகைகளை குறித்து  அவதூறு பேசி சர்ச்சையாக பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சூர்யாவிற்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனக்கூறி சர்ச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன். அப்போது என் காட்சிகளை நான் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். ஆனால் சூர்யாவோ ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 டேக் வரை எடுத்தார். அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது.’ எனக் கூறி சூர்யா ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News