×

மாணவன் போட்ட ட்வீட்... வைரல் ஆன சூர்யா... இப்படியா பண்ணாரு?

.அப்படி நிதியுதவி பெற்ற ஒரு மாணவர் போட்ட ட்வீட் பலரையும் கவர்ந்துவிட்டது.
 
actor-surya

கொரோனா வைரஸ் பிரச்சனையால் கஷ்டப்படும் தன் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சூர்யா.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பலரும் கஷ்டப்படுகிறார்கள். லாக்டவுன் நேரத்தில் வருமானத்திற்கு என்ன செய்வது என்று கவலைப்படுபவர்கள் பலர். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் சிலர் தங்கள் ரசிகர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அப்படி சூர்யாவும் உதவி செய்தது தெரிய வந்திருக்கிறது.

தன் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோருக்கு நிதியுதவி அளித்திருக்கிறார் சூர்யா. அப்படி நிதியுதவி பெற்ற ஒரு மாணவர் போட்ட ட்வீட் பலரையும் கவர்ந்துவிட்டது. நெல்லை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அவர் புத்தகம் வாங்க வேண்டியிருந்திருக்கிறது. 

அதற்கு ரூ. 4,500 தேவைப்பட்டுள்ளது. அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது என்று அவர் வியந்த நேரத்தில், அவரின் வங்கி கணக்கிற்கு சூர்யா ரூ. 5 ஆயிரம் அனுப்பி வைத்திருந்திருக்கிறார். அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்த மாணவர் சூர்யாவுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த மாணவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது,இந்த நல்ல மனசுக்காகத் தான் அண்ணனை கொண்டாடுகிறோம். எது நடந்தாலும் அண்ணனுடன் இருப்போம். தன் ரசிகர்கள் கேட்காமலேயே நிதியுதவி அளித்த அந்த மனசு தான் சார் கடவுள் என்று தெரிவித்துள்ளனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News