×

சூர்யா என்னுடன் நடித்து தப்பு பண்ணிட்டார்... பரபரப்பை கிளப்பிய ஸ்ருதிகா

அவர் என் கூட சூர்யா சார் நடிச்சு தப்பு பண்ணிட்டாரு நந்தா படம் எவ்வளவு பெரிய ஹிட் அதற்கு பின் என்னுடன் நடித்தார் என்று கூறினார்.

 
ba813523-541b-4f86-92da-29943de6dca9

நடிகர் சூர்யா நடிப்பில் ஆரம்ப காலகட்டங்களில் உருவான படம் ஸ்ரீ. இந்த படத்தில் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா நடித்து இருப்பார். 16 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகினார்.

இப்படம் ஓரளவிற்கே வெற்றியை தந்தது. இதையடுத்து தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தார். இவர் நடித்த தித்திக்குதே படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வாய்ப்புகள் குவிந்த நிலையில் திடீரென படிக்கப் போவதாக சென்று விட்டார். சமீபத்தில் இணையதளத்திற்கு பேட்டிகொடுத்து சினிமா அனுபவங்களையும் பரிமாறியுள்ளார்.

சூர்யாவுடன் ஸ்ரீ படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி தொகுப்பாளினி கேட்க, அதற்கு அவர் என் கூட சூர்யா சார் நடிச்சு தப்பு பண்ணிட்டாரு நந்தா படம் எவ்வளவு பெரிய ஹிட் அதற்கு பின் என்னுடன் நடித்தார் என்று கூறினார். படத்திற்கு பிறகு சூர்யா சாரை பார்க்கவே இல்லை சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். நண்பர்களுடன் மட்டும் தான் நேரத்தை செலவிட்டேன்.

தற்போது திருமணமாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போட்டோஹுட்டில் கலக்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News