நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா?... கொடி பிடித்த சூர்யா ரசிகர்கள்
கருப்பு சூப்பர் ஹிட் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். தெலுங்கு ப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியாகியுள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சங்கள் வந்துகொண்டிருக்கிறது.
விஜய் அரசியலில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த இடத்தை யார் கைப்பற்றுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் சூர்யாவின் கருப்பு வெற்றி அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. விஜய் அரசியலை அடுத்து தனுஷின் சமீபத்திய நடவடிக்கைகள் அவரும் அரசியலில் வருவாரோ என்று பலரையும் எண்ணவைத்துள்ளது, சமீபத்தில் நடந்த 40 மாவட்டங்களின் தலைவர்களை நியமனம் செய்யும் வேகத்தை பார்க்கையில் அந்த சந்தேகம் உறுதியாகியுள்ளதாகவே பலரும் கூறுகின்றனர்.

விஜய் அடுத்து தனுஷ் அரசியலில் வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் நங்கள் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று தற்போது மன்ற கொடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திடீரென கொடியை அறிமுகம் செய்து தியேட்டர் மேல் நின்று அதனை அசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதனை பார்க்கையில் சூர்யா ரசிகர்களும் தங்கள் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ர எண்ணம் இருப்பதை உறுதி செய்துள்ளது.