Connect with us
aravind

Cinema News

அரவிந்த்சாமினு சொன்னதும் தயங்கிய சூர்யா! ‘மெய்யழகன்’ பட இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட்

Meyyazhagan Movie:  96 பட பிரேம் இயக்கும் திரைப்படம்தான் மெய்யழகன். இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில்தான் நடைபெற்றது. விழாவிற்கு சூர்யா வருகை தந்தார். அவர்தான் மெய்யழகன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

முதலில் மெய்யழகன் பட ஸ்கிரிப்டை கார்த்தியிடம் கொடுத்ததும் தனக்குண்டான பிஸி செட்யூலை சொல்லி எப்படியும் சீக்கிரம் படித்துவிட்டு பதில் சொல்கிறேன் என கார்த்தி பிரேம் குமாரிடம் சொல்லிவிட்டாராம். ஏற்கனவே மெய்யழகன் பட கதை 96 படம் எப்படி ஒரு எதார்த்தமான கதையாக இருக்குமோ அதே மாதிரியான ஒரு எதார்த்தத்தை அடிப்படையாக கொண்ட கதை.

இதையும் படிங்க: ஜெயம் ரவிக்கும், தனுஷூக்கும் இடையே நடந்த விவகாரம்… விவகாரத்துக்கு இதுவும் காரணமா?

அதனால் படத்தின் சாராம்சம் மாறாமல் அப்படியே படத்தை எடுக்க வேண்டும் என்றால் 2டி தயாரித்தால் தான் முடியும் என ஆரம்பத்திலேயே பிரேம்குமாரிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதை கார்த்திக்கு பிடித்துப் போக சூர்யாவை பிரேம்குமார் நெருங்குவதற்கு முன்பே கார்த்தி சூர்யாவிடம் இந்தப் படத்தின் கதை பற்றி பேசிவிட்டாராம்.

அதனால் பிரேம்குமார் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். பின் ஒரு நாள் பிரேம்குமாரை சூர்யா அழைத்து யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டிருக்கிறார். அதற்கு பிரேம்குமார் கொஞ்சம் கூட யோசிக்காமல் அரவிந்த்சாமி என சொன்னாராம். உடனே சூர்யா ‘ நானும் அவரைத்தான் நினைத்தேன். இருந்தாலும் உனக்கு வேறொரு ஆப்ஷன் இருக்கும்ல அத சொல்லு’ என கேட்டாராம்.

இதையும் படிங்க: அரண்மனை4ஐ தொடர்ந்து காஞ்சனா4… ஹீரோயின் யாரு தெரியுமா? சுவாரஸ்ய அப்டேட்

இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிக்கும் போதே அரவிந்த்சாமியை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறார் பிரேம்குமார். அதனால் வேற எந்த ஆப்ஷனும் இல்லை என்று பிரேம்குமார் கூறினாராம்.

அதுமட்டுமில்லாமல் சூர்யாவை பார்த்து ‘ நீங்களும் கார்த்தியும் எப்படி இருக்கிறீர்கள்? அதாவது ஒரு 5 வயது வித்தியாசம் உள்ள ஒரு கதாபாத்திரமாக இருக்க வேண்டும். பார்த்தவுடனே மரியாதை வரவேண்டும். அதனால் அரவிந்த்சாமி இருந்தால்தான் சரியாக இருக்கும்’ என பிரேம் குமார் கூறியிருக்கிறார். இதை கேட்டதும் சூர்யா ‘ நானும் இப்படித்தான் யோசித்தேன். சரி படத்தை எடு’ என சொன்னாராம் சூர்யா.

இதையும் படிங்க: கணவர் எப்படி இருக்கணும்னு ரவிக்கிட்ட கத்துக்கணும்!.. வைரலாகும் ஆர்த்தி பேட்டி!…

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top