கருப்பு பட ஒளிப்பதிவாளருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த சூர்யா
சூர்யா நடிப்பில் கடந்த் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன் என பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சிங்கம் 2 படத்திற்கு பிறகு கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவிற்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இதுவரை உலகளவில் ரூ 300 கோடியை தாண்டியுள்ளது இப்படம். தமிழகத்தின் தென்மாவட்டங்களின் காவல் தய்வமான கருப்பு சாமியை மையமாக வைத்து ஒரு ஜனரஞ்சகமான திரைக்கதையை அமைத்ததால் படம் அனைவரையும் கவர்ந்தது. சாய் அபயங்கரின் இசையும் படத்தின் வெற்றிக்கு பலமாக இருந்தது.

இந்த நிலையில் கருப்பு பட்யத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே விஷ்ணுவிற்கு ஒரு விலை உயர்ந்த காரை சூர்யா பரிசாக அளித்துள்ளார். அந்த புகைப்படத்"எல்லாம் இறைவனின் செயல்!! மிக்க நன்றி சூர்யா சார். உங்களுக்குப் மிகப்பெரிய மனசு!!! என ஜி.கே விஷ்ணு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
