surya
கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா மீது பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதுவும் குறிப்பாக அவரை மட்டுமே டார்கெட் செய்து ஆடியன்ஸ் என்கிற பெயரில் ஒரு சில பேர் கங்கணம் கட்டிக்கொண்டு அவரை வசைப்பாடி வருகின்றனர். இன்னும் சிலர் இதற்கு பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். அரசியல் இருக்கும் அளவுக்கு சூர்யா அப்படி என்ன செய்தார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
எந்த ஒரு பிரச்சனைக்குள்ளும் போகாமல் சினிமா உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் சூர்யா. அது மட்டும் அல்ல. தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் செய்து வருகிறார். இதுவரை எந்த ஒரு பொது விமர்சனத்திற்குள்ளும் சிக்காதவர் சினிமாவை தன் உயிர் போல நினைப்பவர். இப்படி இருக்கும் இவரை ஏன் இந்த அளவு விமர்சித்து வருகிறார்கள் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.
கதையை தாண்டி தனிமனித தாக்குதல் என்கிற போர்வையில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என அத்தனை பேரையும் கடுமையாக ஒரு சில பேர் சாடி வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என இப்போது வரை தெரியவில்லை. சூர்யாவும் இதை நினைத்திருக்க மாட்டார். இந்த படத்திற்காக இரண்டு வருடம் கடுமையாக உழைத்திருக்கிறார் .ஒரு பெரிய நடிகரை பொருத்தவரைக்கும் இந்த இரண்டு வருடத்திற்குள் எத்தனையோ படங்கள் நடித்திருக்கலாம்.
ஆனால் அவர் இந்த படத்திற்காக அந்த இரண்டு வருடத்தையும் இதற்காகவே கழித்திருக்கிறார். இந்த படத்திற்கு பின்னாடி இவருடைய கடின உழைப்பும் நமக்கு நன்றாகவே தெரிகிறது. அதுவும் இதற்கு முன் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் கடும் விமர்சனத்தை சந்தித்தபோது சம்பந்தப்பட்ட இயக்குனர்களையும் சேர்த்து விமர்சிப்பார்கள். கங்குவா படத்தை பொறுத்த வரைக்கும் சூர்யா கார்த்தி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஜோதிகா என ஒட்டுமொத்த குடும்பத்தையும் சேர்த்து விமர்சித்து வருகிறார்கள் .
இது எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என மிகவும் பெருந்தன்மையாக கூறினார் சூர்யா . இந்த நிலையில் சூர்யா அடுத்த கட்ட வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். அது சம்பந்தமான வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். அந்த படத்திற்காக என்னை தயார் படுத்தும் விதமாக உடற்பயிற்சி நிலையத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது .எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் படத்திற்காக தன்னுடைய கடின உழைப்பை போடும் நடிகர்கள் மத்தியில் எப்போதும் சூர்யா முன்னிலையில் தான் இருக்கிறார். அவருக்கு ஒரு பெரிய சல்யூட்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DC1i-gtyKHg/?igsh=MWhjMjVucjhuMjBybw==
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…