பாலாவிற்காக இறங்கி வரும் சூர்யா.. எஸ்கேப் ஆன விக்ரம், ஆர்யா, விஷால்!...
இன்று வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்ல பாலா இந்த திரை துறைக்கு வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதையும் சேர்த்து இந்த இசை வெளியீட்டு விழாவில் கொண்டாட இருக்கிறார்கள். அதனால் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பாலாவுடன் தொடர்பில் இருக்கும் பிரபலங்கள், அவருடன் சேர்ந்து பயணித்தவர்கள் என அனைவருமே இந்த விழாவிற்கு வருகை தர இருக்கின்றனர்.
குறிப்பாக இன்று மிகவும் உச்சத்தில் இருக்கும் நடிகர்களான சூர்யா, விக்ரம் இவர்களின் வளர்ச்சிக்கு ஒரு வகையில் காரணமாக இருந்தவர் பாலா. சூர்யாவுக்காக ஒரு நந்தா ,விக்ரமுக்கு ஒரு சேது, அதன் பிறகு இருவரையும் வைத்து ஒரு பிதாமகன் என பேக் டு பேக் ஹிட்டு கொடுத்து அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது பாலா தான். அதனால் அவருடைய இந்த 25 ஆண்டுகால சினிமாவை கொண்டாடும்போது இவர்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா என்பது அனைவரின் கேள்வியாக இருந்தது .
ஆனால் சூர்யா இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை காலை பொள்ளாச்சியில் நடைபெற இருக்கிறதாம். அதனால் இன்று நடக்கும் வணங்கான் இசை வெளியீட்டுக்கு வந்து ஒரு ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன் என்று கூறியிருக்கிறாராம் சூர்யா. அதன் பிறகு இரவு அவருக்கு ஃபிளைட் இருப்பதால் உடனடியாக போக வேண்டிய சூழலில் இருக்கிறார் சூர்யா.
ஏற்கனவே வணங்கான் திரைப்படத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக செய்தி வெளியானது. அதனால்தான் வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலக காரணமாக அமைந்தது. இப்போது இந்த விழாவிற்கு சூர்யா வரும் பட்சத்தில் எல்லாம் சுமூகமாக மாறும். சினிமாவிற்கும் இது ஒரு வகையில் நல்லது என சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் விக்ரம் வெளி நாட்டில் இருக்கிறாராம். அவரால் வரமுடியாது என்று சொல்லிவிட்டாராம். அதே போல் ஆர்யாவும் வெளி நாட்டில்தான் இருக்கிறாராம். விஷாலை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். மற்ற படி சினிமாவில் முக்கியமான சில புள்ளிகளும் இந்த விழாவிற்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.