தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக ஜொலிப்பவர் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில நாள்கள் சினிமா பக்கமே வரவில்லை. இருவரும் சேர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து ஹிட்டும் அடித்தது.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் காக்க காக்க படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் பொறாமைப் பட வைத்தது. இந்த படத்திற்கு பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமீப காலமாக தலைகாட்ட ஆரம்பித்தார் ஜோதிகா. ராட்சசி, மகளிர் மட்டும், காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்து மேலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சூர்யாவை பற்றி ஒரு தகவலை ஜோதிகா நமக்காக பகிர்ந்தார். எப்பொழுது சூட்டிங் இருந்தாலும் குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழாவிற்கு தவறாமல் வந்து கலந்து கொள்வாராம். சூட்டிங் இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு வந்து விடுவாராம்.
மேலும் குழந்தைகள் சம்பந்தபட்ட நாள்களை காலண்டரில் குறித்து வைத்து விடுவாராம். அதை எப்பொழுது மிஸ் பண்ணவே மாட்டாராம். அந்த நாள்களில் கண்டிப்பாக குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என நினைப்பாராம். ஒரு வேளை சூட்டிங் இல்லாத சமயத்தில் சூர்யாதான் பள்ளியில் குழந்தைகளை கொண்டு போய் விடுவாராம். இல்லாத பட்சத்தில் சிவகுமார் தான் போவாராம். இது வரைக்கும் ஒரு நல்ல அப்பாவாக இருந்து வருகிறார். இதை பெருமையாக கூறினார் ஜோதிகா.
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…