×

நீதிபதிகளே பயந்து வீட்டில் இருக்கும்போது.... மாணவர்களை தேர்வெழுத சொல்வதா? சூர்யாவின் கேள்வியால் சர்ச்சை

நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட சூர்யா நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து விட்டதாக நீதிபதி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட சூர்யா நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து விட்டதாக நீதிபதி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று நடந்த நீட் தேர்வு குறித்தும் அதன் கட்டுப்பாடுகள் குறித்தும் பலரும் விமர்சனம் செய்த நிலையில் நடிகர் சூர்யாவும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கொரோனா அச்சத்தால் நீதிபதிகளே வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தும்போது மாணவர்களை அச்சப்படாமல் நிட் தேர்வு எழுத செல்லுங்கள் என சொல்வது நியாயமா எனக் கேட்டிருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் இந்த கருத்து நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் சூர்யாவின் இந்த கருத்தை நீதிபதிகள் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் நேர்மையையும் திறமையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் நீதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News