×

மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து அசத்தும் சூர்யா 

 
vaa

தமிழ்த்திரையுலகில் படத்துக்குப் படம் வித்தியாசமாக நடித்து வருபவர்களுள் ஒரு சிலர் தான். அவர்களில் கமல்ஹாசன், விக்ரம், அஜீத் வரிசையில் வருபவர் தான் சூர்யா. இவரது படங்களை உற்று நோக்கினால் படத்துக்குப் படம் ஏதாவது ஒருவகையில் சில வித்தியாசங்களைக் காட்டியிருப்பார். உதாரணத்திற்கு நந்தா, பிதாமகன், வாரணம் ஆயிரம், கஜினி, ஏழாம் அறிவு, 24, சிங்கம் ஆகிய படங்களைச் சொல்லலாம். 

s3

சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர். இவர் 23.7.1975ல் பிறந்தார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர். தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் குழந்தைகளின் படிப்புக்காக அகரம் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றியை கொண்டு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.

இவர் தமிழ் திரையுலகின் 1965-ல் திரையுலகில் அறிமுகமாகி 1970 முதல் 1980-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் சிவகுமாரின் மூத்த மகன். தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பிறந்துள்ளார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்தவர். தற்போது சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.

su5

36 வயதினிலே, பசங்க 2, 24, தானா சேர்ந்த கூட்டம், கடைகுட்டி சிங்கம், ஜாக்பாட், சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், பேரழகன், வாரணம் ஆயிரம், அஞ்சான், பார்ட்டி, நேருக்கு நேர், சந்திப்போமா, காதலே நிம்மதி, பூவெல்லாம் கேட்டுப்பார், பெரியண்ணா, உயிரிலே கலந்தது, பிரண்ட்ஸ், மொளனம் பேசியதே, நந்தா, ஸ்ரீ, பிதாமகன், உன்னை நினைத்து, ஆய்த எழுத்து, காக்க காக்க, ஆறு, பேரழகன், மாயாவி, கஜினி, வேல், சில்லுனு ஒரு காதல், ஜூன் ஆர், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், ரத்த சரித்திரம், ஏழாம் அறிவு, மாற்றான், சென்னையில் ஒருநாள், சிங்கம் 2, அஞ்சான், மாசி என்கிற மாசிலாமணி, எஸ்3, கடைகுட்டி சிங்கம், காப்பான், என்ஜிகே, சூரரைப் போற்று 

நவரச, சூர்யா 39, அருவா, சூர்யா 42, எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இவருக்கு ஒரு சகோதிரியும், ஒரு சகோதரரும் உள்ளார். இவரின் தம்பி கார்த்தி தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது தம்பியும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராவார். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து செப்டம்பர் 11, 2006- ல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர்.

சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்திற்கு பின்னர் பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் என பல திரைப்படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

இவர் தமிழ் திரையுலகிற்குள் 1997-ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். இருந்தாலும், துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். 1999-ல் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தினை இவர் நடித்த நந்தா, பிரெண்ட்ஸ், உன்னை நினைத்து ஆகிய திரைப்படங்கள் தமிழில் பிரபலமானது. இவர் காக்க காக்க, பிதாமகன், கஜினி  திரைப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகரானவர்.

இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது மற்றும் இவர் இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

சூர்யா,  திரைப்படத்தை தவிர, 2006-ல், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்பீஸ்ட், 2010-ம் ஆண்டு, சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ் மற்றும் இமாமி நவரத்தினா தயாரிப்புக்காகவும், 2011-ம் ஆண்டு,  க்ளோஸ் அப்,  2012-ல், மலபார் கோல்ட் என்ற நகை குழு அமைப்பிற்காகவும் விளம்பரங்களில் நடித்தார். 2013 -ம் ஆண்டு, அவருக்கு தென் இந்தியாவின் சிறந்த ஆண் தூதராக தேர்ந்தெடுத்து எடிசன் விருதுகள் (இந்தியா) வழங்கப்பட்டது.

சூர்யாவின் டாப் 5 படங்கள்

பிதாமகன் 

pi

2003ம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளியான படம். விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா நடித்த இப்படத்தில் இளையராஜா இசை அமைத்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர். சக்தி என்ற கேரக்டரில் வரும் சூர்யா மக்களை ஏமாற்றி பிழைக்கும் தொழிலைச் செய்து வருகிறார். படத்தில் படு அசால்டாக நீண்ட வசனங்களை எல்லாம் மளமளவென பேசி அசத்தியிருப்பார். பிறையே, அருணா ருணம், இளங்காத்து வீசுதே, கொடியேத்தி வைப்போம், அடடா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

கஜினி

kh

2005ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் கஜினி. ஜோடியாக அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். 2008ல் வெளியான இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்து இருந்தார்.  நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அத்தனையும் மெகா ஹிட். ஒரு மாலை, எக்ஸ் மச்சி, சுட்டும் விழி சுடரே, ராகத்துல்லா, ரங்கோலா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றவை. இப்படத்தில் சூர்யா ஒரு ஷார்ட் டர்ம் மெமரி லாஸ் என்ற நோயாளி கேரக்டரில் வந்து காட்சிக்கு காட்சி மிரட்டியிருப்பார்.  

கஜினி படத்தில் எதற்காக நடித்தேன் என கேட்டதற்கு சூர்யாவின் பதில் இதுதான். முருகதாஸ் சார் அந்தக் கதையைச் சொல்லும்போது என்னால் இதில் ஒழுங்காக நடிக்க முடியுமா என்ற பிரமிப்புதான் ஏற்பட்டது. இந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய முடியுமா என்று தோன்றியது. அந்த அழுத்தம்தான் என்னை ஒப்புக்கொள்ளச் செய்தது என்று நினைக்கிறேன். எங்களிடம் திரைக்கதை இருந்தது. அதை எப்படி திரையில் கொண்டு வருவது என்பதை நாங்கள் பேசிப் பேசி முடிவு செய்தோம்.

இந்தப் படத்துக்காக என் மருத்துவ நண்பரிடம் கலந்தாலோசித்தேன். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்த்தேன். அவர்களிடம் அது குறித்த நூலகம் இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி எப்படி நடந்து கொள்வார் என அவர்களிடம் விவரங்கள் இருந்தன. காணொலிகள் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்தேன், படித்தேன்.

ஒரு காஃபி ஷாப்பில் உட்கார்ந்து யோசிக்கும்போது தலையில் அந்தக் கோடு போடும் யோசனை வந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் தலையில் தையல் எப்படித் தெரியும் என்று தெரிந்துகொண்டேன். இந்த அத்தனை விஷயங்களும் படப்பிடிப்புக்கு முன்னால் எழுதி வைக்கப்பட்டன. ஆர்.டி.ராஜசேகர், முருகதாஸ் என அனைவரும் சேர்ந்துதான் யோசித்து உருவாக்கினோம். அது அற்புதமான அனுபவம்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார். 

காக்க காக்க 

kaka

2003ல் வெளியான இப்படத்தை கொதம் மேனன் இயக்கினார். சூர்யாவுடன் ஜோதிகா இணைந்து நடித்தார். உடன் ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரி கேரக்டரில் சூர்யா நடித்து அசத்தியிருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். தூது வருமா, என்னால் கொஞ்சம், ஒன்றா ரெண்டா, ஒரு ஊரில், உயிரின் உயிரே ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.   

ஏழாம் அறிவு 

7th

2011ல் வெளியான இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இது ஒரு அறிவியல் ரீதியிலான மாறுபட்ட கதைகளத்தை உடையது. ஜோடியாக சுருதிஹாசன் நடித்தார். ஜானி ட்ரை, ஙயென், அபிநயா, அவினாஷ், கின்னஸ் பக்ரு, அஸ்வின், தன்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு 10 நிமிட காட்சிக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டது. ஒரு பாடல் காட்சிக்காக 1000 நடனக்கலைஞர்கள் கலந்து ஆடினர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஓ ரிங்கா ரிங்கா, முன் அந்தி, ஏலேலமா, யம்மா யம்மா, இன்னும் என்ன தோழா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்த திரைக்கதை படத்தை மாபெரும் வெற்றிச்சித்திரமாக்கியது. 
 

வாடிவாசல் 

சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உறுதி செய்த நிலையில் படத்தின் பெயரை வெற்றிமாறன் அறிவித்துள்ளார். 

என்ஜிகே. காப்பான் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடித்த திரைப்படம் சூரரைப்போற்று. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் தான் வாடிவாசல். ஜல்லிக்கட்டுடன் தொடர்புடையது வாடிவாசல் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

சூர்யாவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News