×

ரஞ்சித் இயக்கும் படத்திற்காக 
பாக்சிங் கற்று வரும் சூர்யா

 
suryaranjith

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சூர்யா. இதுமட்டுமல்லாமல் சிறந்த சேவையாற்றுபவர். பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே அகரம் பவுண்டேஷனை நிறுவியவர். அனைவருடனும் அன்பொழுக பழகுபவர். படத்தில் தனது ரோல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அதற்காக தன் உடலை வருத்தி மெனக்கெடுபவர்.

அப்படி வந்ததுதான் சிக்ஸ் பேக். வாரணம் ஆயிரம் படத்திற்காக சூர்யா சிக்ஸ் பேக் வைத்தார். கஜினி படத்திலேயே உடலை முறுக்கேற்றி நடித்து இருப்பார் சூர்யா. இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்து இருப்பார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பெரும் விமர்சனத்தைத் தந்தது. அந்த அளவு வித்தியாசமான படத்தைக் கொடுத்திருப்பார். தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.இரஞ்சித்.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் ரஞ்சித். 

தற்போது பசங்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூரரைப்போற்று பட வெற்றிக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜோடி பிரியங்கா மோகன.; இந்தப்படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். அதன்பின் பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. அது சரி...இந்தப்படத்தில் சூர்யாவிற்கு என்ன கேரக்டர் தெரியுமா..? குத்துச்சண்டை வீரர் அதாங்க பாக்சராம். இந்தப்படத்தில் தனது ரோல் நிஜ பாக்சரைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக பாக்சிங் கற்று வருகிறாராம் சூர்யா. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News