×

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா... சூப்பர் பவர் அவதாரம் எடுக்கிறாரா?

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய் பீம் படங்களில் நடித்து வருகிறார்.
 
 
cea6469c-55ec-448c-b393-7ddf7c8ab9dd

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் சூப்பர் ஹீரோவாக நடிக்கலாம் என்கின்றன தகவல்கள்.

மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், வசந்தபாலான், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, சசி, கௌதம் ஆகியோர் இணைந்து ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் திரைப்படங்கள், வெப் தொடர்கள் தயாரிப்பதாக திட்டம். முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சூர்யா நாயகன்.

surya

1962 இல் உருவாக்கப்பட்ட தி டிசி யின் The Steel Claw கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழில் இரும்புக்கை மாயாவி என்றால் காமிக்ஸ் படிப்பவர்களுக்கு தெரியும். 

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய் பீம் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம். இதற்காக ஒருமாதகாலம் அவர் ஜல்லிக்கட்டு பய்றிசி பெற இருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜின் படம் தொடங்கப்படலாம்.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 
surya

From around the web

Trending Videos

Tamilnadu News