×

கடுமையாக எதிர்க்கும் சூர்யா.. தரக்குறைவாக விமர்சிக்கும் பாஜக ஆதரவாளர்கள்

 
suriya

பாஜக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு,புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல திட்டங்களையும் எதிர்த்து குரல் கொடுத்து பேசி வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் கூட மோடி அரசு கொண்டு வந்த ஒளிப்பதிவு  திருத்த சட்ட மசோதாவையும் எதிர்த்து குரல் கொடுத்தார். 

இதனால் பாஜக ஆதரவாளர்கள் சூர்யாவை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் கருத்துக்களை எதிர்த்து சமுகவலைத்தளத்தில்  இருவரையும் திட்டித்தீர்த்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள். இதில், சிலர் ஜோதிகா-சூர்யாவின் கடந்த கால நிகழ்வுகளை குறித்து பேசி கொச்சைப்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம், ஆதரமில்லாமல் அதுவும் அவர்களின் தனிப்பட்ட விஷயத்தினை சமுக பிரச்சனையில் இழுக்கக்கூடாது என்றும் எப்போதே நடந்த விஷயத்தை சம்பந்தம் இல்லாமல் தற்போது பேசுவது நியாமாகப்படவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News