அமரன் சாதனையை நெருங்கும் கருப்பு..10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
அமரன் சாதனையை நெருங்கும் கருப்பு..10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைப்பில் வெளிவந்துள்ள கருப்பு வெளியான நாள் முதல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் திருவிழா போல் கூட்டம் அலை மோதுகிறது. 2 வது வார துவக்கத்திலும் தமிழகத்தில் பல திரையரங்குகள் ஹவுஸ் புல்லாகவே இருக்கிறது.

கருப்பு சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின் சூர்யா சந்திக்கும் மிகப்பெரிய வெற்றி இது.
இந்த நிலையில் கருப்பு படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலகளவில் ரூ 250 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த அமரன் கிட்டத்தட்ட ரூ 300 கோடி வசூலை பெற்றது. ஆனால் தற்போதைய நிலவரப்படி கருப்பு அந்த சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.
