வெறித்தனமான வேட்டையில் கருப்பு...20 நாட்களில் வசூல் நிலவரம்
வெறித்தனமான வேட்டையில் கருப்பு...20 நாட்களில் வசூல் நிலவரம்
Jun 4, 2026, 12:02 IST
சூர்யா, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்த படத்தின் கதை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற தெய்வமான கருப்பு சாமியை மையமாக வைத்து பரபரப்பான திரைக்கதையை அமைத்திருந்தார். கூடவே சாய் அபயங்கரின் இசை படத்தில் கூடுதல் பலம் சேர்த்தது.

2026ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமான கருப்பு வசூலி மிரட்டிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 20 நாட்கள் கடந்த நிலையில் இப்படம் உலகளவில் ரூ 319 கோடி வசூல் செய்துள்ளது. இத்தனை நாட்கள் கடந்த நிலையிலும் பல ஊர்களில் திரையரங்க்குகளில் கூட்டம் குறையாமல் இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
