அமரன் சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய கருப்பு
சூர்யா நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன், திரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான நாள் முதலே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வந்த இப்படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து 13 ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிய சூர்யாவிற்கு இப்படம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளது. சாய் அபயங்கரின் இசை வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
கடந்த 2024ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட ரூ 300 கோடி வசூல் செய்தது. விஜய் படங்களுக்கு அடுத்து சிவாவின் அமரன் செய்த வசூல், சாதனையாக இன்று வரை இருந்தது.

இந்த நிலையில் கருப்பு படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது. கருப்பு ரூ 300 கோடி வசூலை தொட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அமரன் சாதனையை முறியறித்துள்ளார் சூர்யா. தமிழகத்தில் பல ஊர்களில் இத்திரைப்படம் இன்னும் கூட்டம் குறையாமல் இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
