Karuppu OTT Release: திரையில் பேயாட்டம் ஆடிய கருப்பு: ஓடிடியில் எப்போது வெளியாகிறது தெரியுமா?
சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, மலையாள நடிஅக்ர் இந்திரன், நட்டி உள்ளிட்ட பல்ர் நடித்துள்ள இந்த படம் வெளியான நால் முதலே வசூலில் பட்டையை கிளப்பியது. படக்குழுவே நினைக்கத வெற்றியை இப்படம் பெற்றிருக்கிறது. படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை உலகம் முழுவதும் ரூ 350 கோடி வசூலை நெருங்கியிருக்கும் என்று கூறுகிறார்கள். இப்படத்தி வெற்றி விழாவையும் படக்குழு கொண்டாட முடிவு செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் திரையில் பேயாட்டம் ஆடிய கருப்பு அடுத்து ஓடிடியில் ஆட்டம் போட வருகிறது. அமேசன் பிரைமில் வருகிற 19ம் தேதி ஸ்டீமிங் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகரபூர்வ அறிவிப்பு எதும் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் படம் இன்னும் பல திரையரங்குகளில் அதிக பார்வையாளர்களின் என்ணிக்கையில் ஓடிக்கொண்டிருப்பதால் ஓடிடி வெளியீடை தள்ளி போடுமாறு பலரும் கோரிக்கை வைப்பதாகவும் கூறுகிறார்கள்.
