Categories: latest news television

சக்க போடு போட்ட அந்த டிவி ஷோ..! மீண்டும் வரப் போகிறதா…? ஆச்சரியமூட்டும் தகவல்…!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொருத்தவரைக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு சம்பந்த நிறுவனம் படும் பாடு சொல்லமுடியாதவை. அதிலும் குறிப்பாக தங்களுடைய டிஆர்பியை உயர்த்துவதற்கு பல நிறுவனங்கள் மெனக்கிடுகின்றனர்.

ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு சாதாரணமாக பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்களை வைத்து தங்கள் இலக்குகளை அடைய முற்படுகின்றனர். ஆனால் அதையும் மீறி எதாவது செய்யவேண்டும் என யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.

இதையும் படிங்கள் : எனக்கு தான் வேணும்…சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி… கசிந்த தகவல்

அந்த வகையில் வந்த முறை தான் தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலமான நட்சத்திரங்களை வைத்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் டிஆர்பி உயர நிறுவனத்தின் தரமும் உயர்ந்து விடுகின்றன. அந்த வகையில் கோடீஸ்வரன், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற நிகழ்ச்சிகளாகும்.

அதிலும் குறிப்பாக நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தாறு மாறு ஹிட் ஆன நிகழ்ச்சியாகும். மறுபடியும் அந்த நிகழ்ச்சி வருமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். மேலும் அந்த நிகழ்ச்சி மறுபடியும் வந்தால் நடிகர் கார்த்தி அல்லது நடிகர் ஜெயம் ரவி இவர்களில் யாராவது தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் எனவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் அந்த நிகழ்ச்சி ஏதோ சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பிரச்சினையில் மாட்டி விட மறுபடியும் ஒளிபரப்ப சாத்தியம் இல்லை என்று கோடம்பாக்கத்தில் தெரிவிக்கின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini