மம்மூட்டியுடன் கைகோர்க்கும் சூர்யா.. கங்குவாவுக்கு பிறகு கதகளி ஆடப் போயிட்டாரே

by Rohini |
surya
X

சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தற்போது சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. அந்த படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யாவின் அடுத்த படம் பற்றிய செய்தி தான் தற்போது வைரலாகி வருகின்றது. சூர்யாவின் அடுத்த படத்தை மலையாள இயக்குனர் பசில் ஜோசப் இயக்கப் போவதாக ஒரு செய்தி போய்க் கொண்டிருக்கின்றது. இவர் இயக்குனராகவும் நடிகராகவும் மலையாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். ஜெய ஜெய ஜெய ஜெய என்ற படத்தை இயக்கியவரும் அதில் நடித்தவரும் இவர் தான் .

பசில் ஜோசப் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர். சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மலையாள இண்டஸ்ட்ரியில் இவருக்கு என ஒரு தனி மரியாதை இருக்கிறது. இவர்தான் சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் கூடுதலான ஒரு விஷயம் என்னவெனில் இந்த படத்தை தயாரிக்கப் போவது மம்முட்டி என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே மம்முட்டியுடன் ஜோதிகா காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருந்தபோது சூர்யா அந்த படப்பிடிப்பிற்கு சென்று மம்முட்டியை சந்தித்து பேசினார். அதே சமயம் பல இயக்குனர்களுடனும் அந்த சமயத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது .அப்பொழுதுதான் பசில் ஜோசப்புடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு சூர்யாவே பசில் ஜோசப்பிடம் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டதாகவும் தகவல் சொல்லப்படுகிறது .

இப்படி தான் இந்த ப்ராஜெக்ட் ஆரம்பமாகி இருக்கிறது. ஒரு பக்கம் மலையாள இயக்குனர் ஒரு பக்கம் மலையாள தயாரிப்பாளர் என கேரளா பக்கமே முழுவதுமாக சாய்ந்து விட்டார் சூர்யா என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நாள் வரை பாலிவுட் பக்கம் போய் விட்டதாக சூர்யா பற்றி விமர்சனம் செய்து வந்தனர். இப்பொழுது மலையாள பக்கம் சாய்ந்து விட்டார் என மீண்டும் அவரை விமர்சித்து வருகின்றனர். கங்குவா படத்திற்கு பிறகு எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் சூர்யா. அது கார்த்திக் சுப்புராஜ் படத்தின் மூலம் நடக்குமா? அல்லது ஆர் ஜே பாலாஜி மூலம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Next Story