×

அருவாவை டீலில் விட்ட சூர்யா… பழிதீர்த்துக்கொண்ட ஹரி- அதிகமாகும் விரிசல்!

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் ஹரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் ஹரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சூர்யா தனது சூரரைப் போற்று திரைப்படத்தை அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிட முடிவு செய்தது பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஹரி சூர்யாவின் இந்த முடிவுக்கு எதிராக நேற்று பொதுவெளியில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை  கிளப்பினார்.

அவரது அறிக்கையில் ‘உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி, ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம். சினிமா என்னும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்எனத் தெரிவித்துள்ளார்.

தன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த அருவா படத்தை வேண்டாம் என சொல்லிவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை ஒப்புக்கொண்டார் சூர்யா. அதனால் கடுப்பில் இருந்த இயக்குனர் ஹரி இப்போது இந்த விஷயத்தில் அறிக்கை விட்டு பழிதீர்த்துக்கொண்டுள்ளார் என கருத்துகள் எழுந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News