லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சக்கபோடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் , நரேன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படம் வெளியானது முதலே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் மக்கள் இன்னும் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஏற்கெனவே வெளியான கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் மவுசை எல்லாம் நம்ம விக்ரம் படம் குறைத்து விட்டது என்றே சொல்லலாம்.
அப்படி ஒரு தாக்கத்தை தமிழ் சினிமாவிற்கு அதுவும் கமல் மூலமாக 4 வருடங்கள் காத்திருந்து பெற்றிருக்கிறது. இந்த படத்தின் கூடுதல் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்னவென்றால் நடிகர் சூர்யா ரோலக்ஸாக நடித்திருப்பது.
இந்த நிலையில் சூர்யாவின் குடும்பத்திற்கு வேண்டப்பட்டவரும் தயாரிப்பாளாரும் வினியோகஸ்தரருமான ஞானவேல்ராஜா விக்ரம் படத்தில் சூர்யா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வருகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட்டார்கள். ஆனால் இப்படி ஒரு நடிகர் வேறோரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதை நான் பெரும்பாலும் விரும்பமாட்டேன். ஆனால் இதை என்னிடம் கூறியபோது அதை நேர்மறையாகவே எடுத்துக் கொண்டேன் என கூறினார்.
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…