இனிமே சூர்யா படம் வந்தாலும் தள்ளித்தான் போகணும்!.. தமிழ்நாட்டில் 60 கோடி வசூலித்த ‘சீன்’!..

 
scene

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு ரொம்பவே அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் நடிப்பில் தொடர்ந்து வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள சீன் திரைப்படமும் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார். அவருடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படத்தை 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டுமே சூர்யா தயாரிப்பு நிறுவனங்கள் தான்.

நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வெளியான நான்கு நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.150 கோடியை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியைக் கடந்துள்ளதாக சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டிலேயே சீன் திரைப்படம் 100 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர் ரசிகர்களை மீண்டும் சூர்யா ஆக்கிரமித்து விட்டார் என்று தெரிகிறது.

Tags

From Around the web