கருப்ப சாமிக்கு நன்றி... சக்ஸஸ் மீட்டில் சூர்யா நெகிழ்ச்சி!

 
surya karuppu

கருப்பு திரைப்படம்:

கடந்த 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் தான் கருப்பு. சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது .

இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய நடிகர் சூர்யா நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என நான் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் நன்றாக யோசித்து முடிவு எடுத்தேன். 

அனைத்துமே இந்த திரைப்படத்தில் சரியாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. முழுக்க முழுக்க இது ஆர் ஜே பாலாஜி விஷன் தான். அவர் சொல்லும்போது தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் இந்த திரைப்படத்திற்கு கிடைக்கும் என்று கதை கேட்கும் போதே நம்பிக்கை வந்துடுச்சு.

surya

சூர்யா நெகிழ்ச்சி:

 நம்பிக்கை வச்சு தான் எல்லா படங்களுமே செய்கிறோம். முதல் மீட்டிங்கில் இருந்ததே இந்த படத்தில் எல்லா விஷயங்களும் நன்றாகவே போய்ட்டு இருந்துச்சு. அதற்கு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் காரணம். அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க வைத்த கருப்பசாமிக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி.

இது நடக்க வேண்டும் அப்படின்னு நான் ரொம்பவே ஆசைப்பட்டேன். எதிர்பார்க்காத பெரிய வெற்றியை கொடுத்த எல்லாருக்குமே ரொம்ப நன்றி சொல்லிடுறேன். இப்படி ஒரு இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்துல நான் தியேட்டர்ல பார்த்ததே இல்லை.  இந்த படம் நன்றாக கனெக்ட் ஆகியிருக்கு மிக்க நன்றி என சூர்யா பேசியிருந்தார். 

Tags

From Around the web