×

கொரோனா அச்சம் : சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் படப்பிடிப்புகள் நிறுத்தம்

 
கொரோனா அச்சம் : சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் படப்பிடிப்புகள் நிறுத்தம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஆனால், படப்பிடிப்புகளுக்கு இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படவில்லை. எனவே, புதிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர்களின் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் பணியாளர்களை கொண்டு படப்பிடிப்புகளை நடத்த முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு குழுவில் யாருக்காவது கொரோனா ஏற்பட்டால் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News