×

கடுமையாக உடற்பயிற்சி செய்யும் சூர்யா - வைரலாகும் புகைப்படங்கள்
 

நடிகர் சூர்யா உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தில் அஜித்திற்கு பதில் நடிக்க வந்தவர்தான் சூர்யா. தொடக்கத்தில் தடுமாறினாலும் அதன் பின் காக்க காக்க, பிதா மகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனது நடிப்புத்திறமையை மெருகேற்றி முன்னணி நடிகராக உயர்ந்தார்.

உடலை எப்போது கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவர் முதன் முறையாக வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்தார். தனது வீட்டில்யே ஜிம் வைத்திருக்கும் அவர் எப்போது படப்பிடிப்பு முடிந்து இரவு நேரம் வீட்டிற்கு வந்தாலும் சில மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்து விட்டே தூங்க செல்வதாக அவரின் தம்பி கார்த்திகே பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது சமீபத்திய புகைப்படம் இல்லை. ராம்கோபால் இயக்கத்தில் ரத்தசரித்திரம் படத்தில் அவர் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்களை சூர்யா ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News