கருப்பு ஹிட் கொடுத்தும் போனியாகாத விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜன்
 
viswanath and sons

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜன் உள்ளிட்ட பல்ர் நடித்திருந்தனர். கடந்த  மே 14ல் வெளியான இப்படம்  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெற்றியை ருசிக்காத சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. உலகமெங்கும்  ரூ 300 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது.

இதையடுத்து சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர தயாராக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் திரையரங்க உரிமை படம் வெளிவருவதற்கு முன்பே நல்ல விலைக்கு விற்பனை ஆகியுள்ளது. இதனால் படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தினை கொடுத்துள்ளது.

viswanath and sons

இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் கோ படத்தின் சாட்டிலைட் உரிமை இதுவரை விற்பனை ஆகவில்லையாம். கருப்பு கொடுத்த வெற்றிக்கு பின் வரும் சூர்யா படம் என்பதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில் பலருக்கு இந்த செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் கூறும் தொகை அதிகமாக இருப்பதாகவும், அதனால்தான் சாட்டிலைட் உரிமையை வாங்க யாரும் முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

From Around the web