விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிரைலர் தேதி அறிவிப்பு

சூர்யா, மமீதா பைஜூ நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ்  திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 14-ல் படம் திரைக்கு வருகிறது.
 
viswanath and sons

சூர்யா நடிப்பில் கருப்பு பிளாக்பாஸ்டருக்கு பின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ்  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள டீசர் மற்றும்  பட்டாம்பூச்சி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது டிரைலரும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

viswanath and sons

சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 

Tags

From Around the web