Categories: Cinema News latest news

நீண்ட நாள் பசி! ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைக்கப் போகும் சூர்யா.. அதுவும் ஒன்னு இல்ல! ரெண்டு

Actor Surya: வருகிற 23ஆம் தேதி சூர்யா அவருடைய 49 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார் .அவரை விட அவருடைய ரசிகர்கள்தான் சூர்யாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட தயாராக இருக்கிறார்கள். தற்போது சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சூர்யாவின் கெரியரிலேயே இதுதான் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும்.

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானு, பாபி தியோல், யோகி பாபு போன்ற முக்கிய நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். ஜூலை மாதம் பிறந்ததுமே சூர்யா ரசிகர்கள் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிறந்த நாளின் போது ரசிகர்களுக்காக சூர்யா ஒரு பெரிய ட்ரீட் வைக்க இருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமைதிப்படத்தின் கதை அந்த ரஜினி படம்தான்!. பல வருட சீக்ரெட்டை உடைத்த சத்தியராஜ்!..

கிட்டதட்ட சூர்யாவின் திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் அவர் படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லாததால் ரசிகர்கள் மிகவும் ஏமாந்து போயிருக்கின்றனர். அதனால் இந்த பிறந்த நாளின் போது அவர் இப்போது நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதோடு சேர்ந்து சூர்யா அவருடைய 44 வது படத்தை கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் கூட அவருடைய பிறந்த நாளின் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சூர்யாவின் இந்த வருட பிறந்த நாள் மறக்க முடியாத பிறந்த நாளாக ரசிகர்களுக்கு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கங்குவா  திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஒரு வரலாற்று பின்னணியில் அமைந்த இந்த கங்குவா திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ‘மம்மி’ பட கெட்டப் மாதிரி இருக்கே! கல்கி படத்துக்காக கமலுக்கு முதலில் போட இருந்த கெட்டப்.. வைரலாகும் புகைப்படம்

கார்த்திக் சுப்பாராஜுடன் முதன் முதலாக சூர்யா இணைந்திருப்பதால் இந்த கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பே இருந்து வருகிறது. இப்போது இந்த படத்தில்தான் பிஸியாக சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அந்தமானில் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini