பாலா 25ல் பாலாவுக்கு சூர்யா கொடுத்த பரிசு.. ஆச்சரியப்படுத்திய நிகழ்வு
பாலா:
சமீபத்தில் திரைத்துறையினர் அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்த விழா என்றால் அது வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தான். இசை வெளியீட்டு விழா என்பதையும் தாண்டி பாலாவின் 25 வது ஆண்டு விழா என்று சொல்வதில் தான் பெருமை. வணங்கான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த விழா நடப்பதற்கான காரணத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுரேஷ் காமாட்சியின் உதவியாளர் ஒருவர் சேது திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகின்றது என்று சொன்னவுடன் பாலா இந்த திரைத்துறைக்கு வந்து 25 வருடமாகி விட்டதா. ஆனால் இது பல பேருக்கு தெரியாமல் இருக்கிறதே. இத்தனை வருடங்களில் எப்பேர்ப்பட்ட படைப்புகளை அவர் படைத்திருக்கிறார்.
சாதனைகளைப் படைத்த பாலா:
ஆனால் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இன்னும் அடுத்தடுத்து தன்னுடைய வேலையை கவனித்து வருகிறார். இப்படிப்பட்டவருக்கு கண்டிப்பாக ஒரு விழா எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சுரேஷ் காமாட்சி இறங்க இதை பாலாவிடம் தெரிவித்திருக்கிறார் .அதற்கு பாலா இதெல்லாம் தேவையா என்று கேட்டாராம். ஆனால் சுரேஷ் காமாட்சி சொன்ன பிறகு தான் இதற்கு சம்மதித்திருக்கிறார் பாலா .
கிட்டத்தட்ட 600 பத்திரிகைகள் அச்சிடப்பட்டு அனைவருக்குமே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சிவக்குமார் மற்றும் சூரியாவுக்கும் அழைப்பு போக சிவக்குமார் உடனே நான் வருகிறேன் என ஒப்புக்கொண்டாராம் .சூர்யா வருவாரா என கேட்டதற்கு நான் வராமல் எப்படி என சூர்யா சொன்னதாக சிவகுமார் சொல்லி இருக்கிறார் .அதனால் கண்டிப்பாக சூர்யாவும் வருவார் என சிவக்குமார் சுரேஷ் காமாட்சியிடம் சொல்லி இருந்தாராம்.
சூர்யா கொடுத்த அன்பளிப்பு:
அதன்படி பாலாவும் இந்த விழா நடப்பதற்கு முந்தைய நாள் சுரேஷ் காமாட்சி இடம் நாளை சூர்யா வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்றும் கூறியிருக்கிறார். அதன்படி சூர்யாவும் வர நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணமே பாலா அண்ணன் தான். அவர் இல்லை என்றால் நான் இல்லை என்பது போல மிகப் பெருந்தன்மையுடன் அந்த மேடையில் பேசி அவருக்கு அன்பளிப்பாக செயினும் போட்டார்.
இதைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது என சுரேஷ் காமாட்சி அந்த பேட்டியில் கூறினார். அதைப்போல விஷாலுக்கும் தொலைபேசியில் நான்கு ஐந்து முறை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். போதாததுக்கு அவருடைய உதவியாளருக்கும் தொடர்பு கொண்ட போது யாருமே ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்லையாம். அதனால் வருவதும் வராததும் அவர்களுடைய இஷ்டம். அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சுரேஷ் காமாட்சி கூறினார்.