சூர்யா – பாலா இணைந்து உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. வணங்கான் என பெயரிடப்பட்ட அந்த படத்தின் முதல் ஷெட்யூல் மே மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. அடுத்த ஷெட்யூம் கோவாவில் நடத்த திட்டமிட்டனர் படக்குழு.
ஆனால் சில பல காரணங்களால் கோவாவில் நடத்த முடியவில்லை. படத்தில் சூர்யா செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபராக நடிக்கிறார். அவர் மீது காதல் வையப்படும் பெண்ணாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூல் செப்டம்பரில் தொடங்கலாம் என சூர்யா தரப்பு தெரிவித்துள்ளதாம். அதற்கிடையில் சூர்யா விஸ்வாசம் சிறுத்தை சிவாவுடன் இணைந்து ஒர் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
இந்த படத்தின் முதல் கட்ட ஷெட்யூலை ஆகஸ்டில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து ஆரம்பிக்க உள்ளாராம் சூர்யா. இதை முடித்தவுடன் வணங்கான் படத்தில் நடிக்க செப்டம்பரில் தேதி கொடுத்திருப்பதாக சூர்யா தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…