×

மனைவிக்காக பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா..

ஜோதிகா பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தபோது பாலா சூர்யாவுக்காக ஒரு வரி கதையை கூறி சம்மதம் வாங்கி வைத்திருந்தாராம்.

 
a32e02c1-90d2-46a5-87f9-6c8c00249f84

தமிழ் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு நடிக்க வைக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. பாலாவின் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வரிசையாக படங்களில் தொடர்ந்து நடிக்க முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

ஆனால் அதன் பிறகு பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் மற்றும் பரதேசி போன்ற படங்கள் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவில் காசு பார்க்கவில்லை. சமீபத்தில் பாலா சூர்யா கூட்டணி பிதாமகன் படத்ஹ்டிற்கு பிறகு 18 வருடம் கழித்து சேர இருக்கிறது.

சூர்யாவின் மனைவி ஜோதிகா பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தபோது பாலா சூர்யாவுக்காக ஒரு வரி கதையை கூறி சம்மதம் வாங்கி வைத்திருந்தாராம். சமீபத்தில் மொத்த கதையையும் கேட்டு விட்டு சூர்யா மிரண்டு விட்டாராம்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News