தேசிய விருது நாயகன் சூர்யா தனது தொடர்ச்சியான ஹிட் படங்களை கொடுத்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில்
ஆழ்த்தினார். ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், சூறரை போற்று போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. மேலும் சில தொடர்ச்சியான விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.
இவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் படம் ஒரு முடிவில்லாமல் இருக்கின்றது. சிலபல பிரச்சினைகளால் கிடப்பிலயே போடப்பட்டிருக்கிறது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42ஆவது படம் தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் சூர்யாவின் 42 வது படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறாராம். இவர் ஏற்கெனவே சூர்யாவுடன் இணைந்து மாயாவி, சிங்கம், சிங்கம்-2, ஆறு போன்ற படங்களுக்கு இசையமைக்கிறார். எப்பொழுதும் ரசிகர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர் தேவி ஸ்ரீபிரசாத்.
சூர்யா, தேவி ஸ்ரீபிரசாத் இணையப்போகும் 5வது படமாக சூர்யாவின் 42 வது படம் அமைய இருக்கிறது. ஒரு பக்கம் சிறுத்தை சிவா இன்னொரு பக்கம் தேவி ஸ்ரீ கூட்டணியில் படம் மாஸ் கட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…