கஷ்டமெல்லாம் வீணா போகல…. "கருப்பு" முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா!
சக்கைபோடு போடும் "கருப்பு"
எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் கருப்பு. நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு தொடர்ச்சியாக திரையரங்கிற்கு படையெடுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதில் ஆரம்பத்தில் சிக்கல் ஏற்பட்டாலும் பின்னர் எப்படியோ படக் குழுவினர் முட்டி மோதி இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்து விட்டார்கள் .
கோடிக்கணக்கில் வசூல்:
படம் எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றியை அவர்களுக்கு தேடி கொடுத்திருக்கிறது. இந்த திரைப்படம் சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய கம் பேக்காக அமைந்திருப்பதாகவும்…. சூர்யா, ஆர்ஜே பாலாஜி இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பதாக பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்திருக்கிறது.
பைனான்ஸ் பிரச்சனையின் காரணமாக ரிலீசாக முடியாமல் இருந்த இந்த திரைப்படம் முதல் நாள் வசூலிலே பல கோடி வருமானம் ஈட்டி குழுவினருக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது. ஆம் இப்படம் ஒரே வெளியான ஒரே நாளில் ரூ.13 கோடி வசூல் செய்து பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
படக்குழுவினர் மகிழ்ச்சி:
மேலும் வார இறுதி நாளாக நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேலும் இதன் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே சூர்யாவின் கருப்பு படம் பைனான்ஸ் பிரச்சனைகளைத் தாண்டி மிகப்பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும் என பட குழுவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
