காந்தாரா சூர்யாவை காப்பாறா? ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு மேட்டரா? சும்மாவே ஆடுவாரு
கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஏற்கனவே ஆர்ஜே பாலாஜியும் சூர்யாவும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஒரு இயக்குனராக ஜாலியான படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் ஆர்ஜே பாலாஜி.
இவர் சூர்யாவை வைத்து படம் பண்ண போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் என்ன மாதிரியான படமாக இருக்கும்? ஒரு வேளை அவருடைய பாணியில் காமெடியான படமாகத்தான் பண்ணுவாரா? அது சூர்யாவுக்கு செட் ஆகுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ஆனால் ஒரு போஸ்டர் வெளியாகி அனைவரின் வாயை அடைத்தார் ஆர்ஜே பாலாஜி.
90களில் மிகவும் புகழ்பெற்ற தொடரான மர்மதேசம் தொடர் மாதிரியான ஒரு உணர்வை இந்த போஸ்டர் ஏற்படுத்தியது. அந்தளவுக்கு பார்த்ததும் கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்தது. மூக்குத்தி அம்மன் படம் போன்ற ஒரு ஆன்மீகம் சம்பந்தமான கதையா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் படத்தில் நடித்த நட்டி இந்தப் படத்தின் கதை பற்றி சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.
அதாவது நீதிமன்றத்தில் என்ன மாதிரியான ப்ராசஸ் நடக்கிறது என்பதை பற்றி தெளிவாக காட்டியிருக்கிறார்களாம். ஆர்ஜே பாலாஜியின் கதை, திரைக்கதை மிகவும் தனித்துவமாக இருப்பதாகவும் நட்டி கூறியிருந்தார். இந்தப் படம் இந்த வருட இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதி பற்றி இன்று வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
சூர்யாவின் நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்கள் அவருக்கு பெரும் தோல்வியைத்தான் தந்தன. மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் ரசிகர்கள் அந்த இரண்டு படங்களையும் கொண்டாடவில்லை. அதனால் கருப்பு படத்தை மிகவும் நம்பியிருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் காந்தாரா படத்தின் வெற்றிக்கு பிறகு கருப்பு படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கருப்பு படத்தின் கிளைமாக்ஸில் சூர்யாவிற்கு கருப்பசாமி அல்லது ஐய்யனார் சாமி புகுந்து விடுவாராம். அதனால் வெறிகொண்டு இருப்பாராம் சூர்யா. அந்த வெறியோடு ஒரு சண்டை காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என காந்தாரா படத்தை பார்த்து இந்த ஐடியாவை கருப்பு படத்தில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காக வரும் 15 ஆம் தேதி அதற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
